May 22

சிங்களப் பேரினவாதிகளுக்கு எதிராக போராட முஸ்லிம்களுக்கு உருத்திரகுமார் பகிரங்க அழைப்பு!

சிங்கள, பௌத்த பேரினவாதத்திற்கு எதிராக போராடுவதற்கு முன்வருமாறு முஸ்லிம் தலைமைகளுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வின்போதே அவர் இந்த அழைப்பினை முன்வைத்துள்ளார்.

ஈழ விடுதலைப் போராட்டத்தின்போது ஜிகாத் அல் அமஜத் ஊர்காவல் படை போன்றவற்றின் வகிபாகத்தையும் தென் தமிழீழத்தில் தமிழ்க் கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக மாற்றப்பட்ட வரலாற்றையும் தான் கவனத்திற்கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் தரப்பால் முன்வைக்கப்பட்ட இடைக்கால தன்னாட்சி அதிகார சபை வரைவிலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட தமிழீழ விடுதலைச் சாசனத்திலும் முஸ்லிம்களின் தனித்துவத்தை பேணும் வகையில் அவர்களுக்கான உரிமைகள் மற்றும் நலன்கள் தெளிவாக உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே அண்மைக்காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள பேரினவாதிகளால் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை வெற்றிகொள்ள முன்வருமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.