May 22

ஞானசார தேரர் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை – சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர்

பொதுபலசேன அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. அவர் தற்போது சிறைச்சாலைக்குள்ளேயே இருக்கிறாரென சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் துசார உபுல் தெனிய தெரிவித்தார்.

மேலும், ஜனாதிபதியிடமிருந்து, ஞானசார தேரரை விடுதலை செய்வதற்கான எந்தவொரு உத்தியோகப்பூர்வ அறிவிப்புக்களும் தமக்கு கிடைக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.