Oct 21

WTA டென்னிஸ் சம்பியன்ஷிப்: பெட்ரா கிவிடோவா தோல்வி!

WTA டென்னிஸ் சம்பியன்ஷிப் தொடரில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் செக். குடியரசின் முன்னணி வீராங்கனையான பெட்ரா கிவிடோவா முதல் போட்டியிலேயே தோல்வியடைந்தார்.


ஆண்டின் இறுதியில், தரவரிசையில் முதல் 8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்கும் பெண்கள் டென்னிஸ் சம்பியன்ஷிப் தொடர் நடத்தப்படுவது வழக்கம். அந்தவகையில் 8 ஆவது பெண்கள் டென்னிஸ் சம்பியன்ஷிப் தொடர் இன்று  ஆரம்பமானது.

இப்போட்டியின் முதல் சுற்றில் உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினாவை செக். குடியரசின் முன்னணி வீராங்கனை பெட்ரா கிவிடோவா எதிர்கொண்டார்.

இந்த போட்டியில் ஆரம்பம் முதல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய எலினா ஸ்விடோலினா, முதல் செட்டை 6-3 என கைப்பற்றினார். பின்னர் தொடர்ந்தும் 2 ஆவது செட்டில் ஆதிக்கம் செலுத்திய அவர் இரண்டாவது செட்டை 6-3 என கைப்பற்றினார்.

இதனால் போட்டியின் முடிவில் 3-6, 3-6 என்ற செட்கணக்கில் எலினா ஸ்விடோலினாவிடம் பெட்ரா கிவிடோவா தோல்வியடைந்தார்.