Oct 21

மகிந்தவை பிரதமராக்கும் யோசனையை நிராகரித்த சுதந்திரக்கட்சி

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்து புதிய அரசாங்கத்தை அமைக்க கூட்டு எதிர்க் கட்சியினர் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி விடுத்த கோரிக்கையை தாம் நிராகரித்துள்ளதாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். சிங்கள வாரப் பத்திரிகை ஒன்று வழங்கிய நேர்காணல் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.


முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்து புதிய அரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பாக கூட்டு எதிர்க் கட்சியினர் மற்றும் சுதந்திரக் கட்சியின் 15 பேர் அணியினர் பல யோசனைகளை முன்வைத்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அந்த யோசனைகளை நிராகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.