Oct 08

பின்லாந்து வானில் பிரமிப்பை ஏற்படுத்தும் “நொதர்ன் லைட்” அசைவுகள்!

மனிதனை விஞ்சிய இயற்கையின் அற்புதங்கள் அன்றும், இன்றும் நிகழ்ந்த வண்ணம்தான் இருக்கின்றன. ஆனால் அவற்றை ரசிப்பதற்கு இன்றைய மனிதனின் வாழ்க்கை முறையோ, மனநிலையோ ஏற்புடையதாக இல்லை.

நேரில் காணும் இயற்கையை ரசிக்க முடியாத மனிதயினம் இணையத்திலோ, வேறு ஊடகங்களிலோ அவற்றை கண்டு வியக்கிறது.

பருவ மாற்றத்தால் ஏற்படும் அசம்பாவிதங்களை கண்டு அஞ்சும் மனிதன் அவை ஏற்படுவதற்கு காரணமாக இருக்கும் விடயங்கள் பற்றி பின்னர் சிந்திப்பதில்லை.

இந்த இயற்கைக்கு மனிதன் என்ன தீங்கு இழைத்தாலும், இயற்கை தனது சக்திக்கு மீறிய வகையில் அவற்றை சீர்செய்து கொள்ள முயற்சிக்கும் தருணத்தில் இவ்வாறான அனர்த்தங்கள் நேர்கின்றன.

ஆனாலும், ஒரு புறத்தில் இயற்கையானது தனது அழகை நிரூபிக்கும் வகையில் வழமையான தன்மையுடன் செயற்பட்டு வருகின்றது.

வட துருவத்தில் ஏற்படும் வானியல் மாற்றத்தால் அழகிய வண்ண கோலங்கள் தோன்றுகின்றன. நொதர்ன் லைட் எனப்படும் வடக்கின் வௌிச்சம் கடந்த சில நாட்களாக ஃபின்லாந்தின் ரொவெனெமி பிராந்தியத்தின் வான்பரப்பில் தென்பட்டு வருகின்றது.

உறைந்த ஏரியின் மீது பச்சை நிறத்திலான ஔிக் கோர்வைகள் பிரதிபலிக்கின்றன. இதனால் ஏரி உட்பட அடர்ந்த வனப்பகுதியும் ஒரு வித்தியாசமான மாயத் தோற்றத்தை வௌிப்படுத்துகின்றன.

பச்சை நிறம் மாத்திரமன்றி இடைக்கிடை ஊதா நிறமும் தனது அழகை வௌிப்படுத்துகிறது. இரண்டு வண்ணக் கலவைகளும் சேர்ந்து வில்வளைவு தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.

பனிக்காலம் ஆரம்பிப்பதற்கு முன்னதாக தோன்றும் இவ்வாறான வண்ண கோலங்கள் நத்தார் பண்டிகைக்கால ஔிவிளக்குகள் போன்று தோற்றமளிக்கின்றன.