Oct 08

புகலிடக் கோரிக்கையாளர்களை ஏற்றிய படகு மோட்ரில் துறைமுகத்தை வந்தடைந்தது

ஆசியா மற்றும் ஆபிரிக்காவின் சஹாரா துணைப் பிராந்தியங்களைச் சேர்ந்த புகலிடம் கோரும் 156 பேரை ஏற்றிய படகொன்று ஸ்பெயின் மோட்ரில் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

அல்போரன் தீவுக்கு அருகில் நேற்று  மீட்கப்பட்ட குறித்த புகலிடக் கோரிக்கையாளர்களில் 5 வயதுக்கு குறைந்த 10 சிறார்களும், 36 பெண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களை அனைவரும் துறைமுகத்தை அடைந்தவுடன், அவர்களுக்கான சுகாதார மற்றும் உணவு வசதிகளை செஞ்சிலுவைச் சங்கத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

தற்போது அவர்கள் சிறந்த உடல் நடத்துடன் இருப்பதாக செஞ்சிலுவைச் சங்கத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடற்பிராந்திய மீட்பு துறையினரின் தகவல்படி, அல்போரன் தீவுக்கருகில் நேற்று மீட்கப்பட்ட 450 புகலிடக் கோரிக்கையாளர்களில் 156 பேர் மாத்திரம் ஸ்பெயினுக்கு அழைத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஞ்சிய புகலிடக் கோரிக்கையாளர்கள் அல்மேரியா மற்றும் மலாக்கா துறைமுகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மொரோக்கோ கரையோரப் பகுதிகளில் இருந்து கடலில் பயணிக்கத் தகாத சில படகுகளில் புகலிடக் கோரிக்கையாளர்கள் வௌியேறி விட்டதாக அரச சார்பற்ற அமைப்பொன்று வௌியிட்ட தகவலுக்கு அமைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நான்கு கண்காணிப்பு படகுகளும், விமானமொன்றும், உலங்கு வானூர்தியொன்றும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.