Oct 06

செச்சினிய தலைநகரின் ஆண்டு நிறைவை முன்னிட்டு 200 ஜோடிகளுக்கு திருமணம்!

ரஷ்ய கூட்டமைப்பின் குடியரசான செச்சினிய தலைநகரான குரோஸ்னியின் 200ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் 200 தம்பதியருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

செச்சினிய தலைநகரின் 200ஆவது ஆண்டு நிறைவு நேற்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு தலைநகரிலுள்ள மலர் பூங்காவில் குறித்த திருமண நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது மணப்பெண்களும், மணமகன்மாரும் பாரம்பரிய முறையில் உடையணிந்து தங்களது உறவினர்களுடன் கலந்துக் கொண்டிருந்தனர்.

இதேவேளை, ஆண்டு நிறைவை முன்னிட்டு கலாசார, விளையாட்டு மற்றும் கச்சேரி நிகழ்வுகளும் செச்சினிய அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.