Sep 22

பம்பலப்பிட்டி பிரதேசத்தில் 3 பேர் கைது


பல்வேறு கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய 3 பேர் பம்பலப்பிட்டி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த சந்தேக நபர்கள் அந்த பகுதியில், உள்ள கைத்தொலைப்பேசி விற்பனை நிலையங்களில் சுமார் 37 லட்சத்துக்கும் அதிக பெறுமதிகொண்ட, கைத்தொலைபேசிகளை கொள்ளையிட்டுள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ஹங்வெல்ல, ருக்கஹவில மற்றும் பாதுக்கை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அவர்கள் இன்றைய தினம் நீதவான் முன்னிலையில், முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.