Jul 12

‘உலகின் மிக புதுமையான நாடு’ என்ற மகுடத்தை மீண்டும் தக்க வைத்துக்கொண்ட சுவிஸ்

தொடர்ந்து எட்டாவது ஆண்டாக, ‘உலகின் மிகவும் புதுமையான நாடு’ என உலக அறிவுசார் சொத்து நிறுவனம், சுவிட்சர்லாந்திற்கு மீண்டும் முடி சூட்டியது.

செவ்வாய் கிழமை வெளியிடப்பட்ட, 2018 இற்கான உலகளாவிய கண்டுபிடிப்பு அட்டவணையில் சுவிட்சர்லாந்து முதலிடம் வகிக்கிறது.

நெதர்லாந்து, ஸ்வீடன், பிரிட்டன் மற்றும் சிங்கப்பூர் முதல் ஐந்து இடத்தில் உள்ளன.

WIPO, கார்னெல் யுனிவர்சிட்டி மற்றும் France’s INSEAD வணிகப் பள்ளி ஆகியவற்றால் தொகுக்கப்பட்ட கண்டுபிடிப்பு ஆய்வு தான், “பொருளாதார மற்றும் மனித வளர்ச்சிக்கு இட்டுச்செல்லும் புதுமையான செயல்பாட்டை தூண்டுவதற்கு உலகளாவிய ரீதியில் முடிவெடுப்போர் சிறந்த முறையில் புரிந்து கொள்ளவும், விரிவான அளவு கருவி உதவுகிறது” என்று விவரிக்கப்படுகிறது.

ஏனைய காரணிகளோடு, WIPO ஆய்வு முடிவுகளும், சுவிட்சர்லாந்தில் புதுமைப் பாத்திரத்தை மேலும் உறுதிப்படுத்தின.