Jul 11

சுவிஸில் மூழ்கி இறந்த இளம் அமெரிக்க பியானோ மேதை

Interlaken அருகில் பர்கெசேலி நகரில் சமீபத்தில் மூழ்கிய 13 வயது அமெரிக்க இளைஞன் தனது குடும்பத்தினரால் ஒரு திறமையான பியானோ மேதை மற்றும் சிறந்த ஹாக்கி வீரராக விவரிக்கப்பட்டுள்ளார்.

ஜூன் மாதப் பகுதியில் மேரிலாந்தைச் சேர்ந்த ஆல்பர்ட் யின், கோடை காலத்தில் பிரபலமான நீச்சல் ஏரியில் மூழ்கினார்.

பொலிஸ் முத்துக்குளிப்பாளரினால் மீட்கப்பட்ட இந்த இளைஞன் மருத்துவமனைக்கு விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டான். எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஆல்பர்ட் ஒரு சிறந்த ஐஸ் ஹாக்கி வீரர் மற்றும் பியானோ மேதை என அவரது குடும்பத்தினர் அமெரிக்க ஒளிபரப்பு CBS க்கு தெரிவித்தனர்.

“கோடையில், நாங்கள் வெளிநாடுகளிலுள்ள புகழ்பெற்ற அரங்கங்களில் நாங்கள் நிகழ்ச்சிகள் நடத்துவோம், இந்த ஆண்டு நாங்கள் இத்தாலிக்குச் சென்றோம், பின்னர் சுவிட்சர்லாந்திற்கு சென்றோம், எங்கள் நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, நாங்கள் விடுமுறை மற்றும் சுற்றுலாத் தலங்களுக்கு செய்வோம்” என்று அவரது சகோதரி மார்கரெட் கூறினார் .

பிளிக் பத்திரிகையின் படி, குறித்த இளைஞனின் மரணம் தொடர்பாக சுவிஸ் போலீஸ் இன்னமும் விசாரணை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.