Jul 11

பிரான்ஸில் அல்லாவை அழைத்த நபரை சுட்ட அதிகாரிகள்!

பிரான்ஸில், நபர் ஒருவர் அல்லா-ஹூ-அக்பர் என கோஷமிட்டுக்கொண்டு காவல்துறை அதிகாரிகளை தாக்க முற்பட்டுள்ளார்.

திங்கட்கிழமை (ஜூலை 9), Vic-sur-Aisne (Aisne) பகுதியில் ‘விசித்திரமான நடவடிக்கைகள்’ என காவல்துறையினரால் குறிப்பிடப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

30 வயதுடைய குறித்த நபர் அல்லா – ஹூ -அக்பர் என சத்தமிட்டுக்கொண்டு காவல்துறை அதிகாரிகளை இரும்பு கம்பி ஒன்றை கொண்டு தாக்க முற்பட்டுள்ளார்.

இதனால் மின்சார துப்பாக்கியால் காவல்துறையினர் குறித்த நபரை தாக்க, அவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் Vic-sur-Aisne பகுதியில் வசிப்பதாகவும் தெரியவந்துள்ளது.

காவல்துறையினர் குறித்த நபரை மடக்கி பிடிக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அதற்குள் அவர் காவல்துறையினரை தாக்க முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், குறித்த நபர் மாரடைப்பினால் தான் உயிரிழந்துள்ளார் என இன்று காலை பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இரண்டு வெவ்வேறு தரப்பட்ட விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.