Jul 10

நெதர்லாந்தில் இந்த வாரம் குளிர்ந்த மற்றும் மேகமூட்டமான வானிலை

கடந்த வாரம் கோடையில் அதிக வெப்பநிலைக்குப் பிறகு, நெதர்லாந்தின் Weerplaza வின் கூற்றுப்படி, இந்த வாரம் குளிர்ந்த மற்றும் மழையுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படுகிறது.

திங்கட்கிழமை முதல் அதிகபட்ச வெப்பநிலை குறைந்த 20 க்கும் குறைவாகவே இருக்கும். அதிகபட்சமாக சுமார் 19 டிகிரி தொடங்கி, கடற்கரை பகுதிகளில் சுமார் 23 டிகிரி வரை செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திங்கள் முதல் நாடு முழுவதும் மேக மூட்டமாயிருக்கும். சில இடங்களில் மழையாக இருக்கும், ஆனால் கடுமையான மழையாக அது இருக்காது.

புதன் வெப்பநிலை மீண்டும் ஏற தொடங்கும், இருப்பினும் நாட்டின் கிழக்கில் சில இடங்களில் மழையாக இருக்கும்.