Jul 10

பீரை பல மாதங்கள் ஜில்லென வைத்திருக்கும் பண்டைய ரோம ஃப்ரிட்ஜ்

சுவிஸ் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், அகஸ்டா ராரிக்காவின் ரோமானிய தளத்தில் கண்டுபிடித்த மர்மமான பொருளொன்றினால் குறைந்தது மூன்று மாதங்களுக்கு beer ஐ ஜில்லென சேமித்து வைத்திருக்க முடியும் என வெற்றிகரமாக நிரூபித்துள்ளனர்.

நான்கு மீட்டர் குழியுடைய இந்த பொருள் பண்டைய குளிர்சாதன பெட்டி போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது சுவிஸ் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கருதுகோளுக்கு எடை சேர்க்கிறது.

பேஸெல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் Peter-Andrew Schwarz தலைமையிலான குழுவானது, ஏப்ரல் மாதம் அந்த சாதனத்தினுள் மற்றைய பொருட்களோடு ஒரு beer பாட்டிலை சில ஐஸ் கட்டிகளோடு சுற்றி வைத்தது, அவர்கள் நம்பியது போலவே, கடந்த வியாழனன்று அந்த போத்தலை வெளியே எடுக்கும் போது beer ஜில்லென என இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் உணர்ந்தனர்.

கோடைக்காலத்தில் பொருட்களை ஜில்லென வைத்திருப்பதற்கு Augusta Raurica வில் இருந்த ரோமர்கள் இந்த சாதனத்தை பயன்படுத்தியிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.