Jul 10

ஆஸ்திரியாவில் உள்ள சுவிஸ் நிறுவனங்களை உளவு பார்த்ததாக ஜேர்மனி மீது குற்றச்சாட்டு

1999 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளுக்கு இடையில், ஜேர்மனி உளவுத்துறையின் இலக்காக இருந்தவை ஆஸ்திரியாவில் உள்ள சுவிஸ் நிறுவனங்களே, என ஜேர்மனியின் பெடரல் உளவுத்துறை சேவையின் ஆவணங்களைக் கண்டெடுத்த SonntagsBlick பத்திரிகை தெரிவித்துள்ளது. இந்த தரவின் ஒரு பகுதி அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஜேர்மனி உளவாளிகளால் இலக்கு வைக்கப்பட்ட நிறுவனங்களில், நோவார்டிஸ் குழுவைச் சேர்ந்த Sandoz நிறுவனம், லொஜிஸ்டிக் சேவை நிறுவனமான Panalpina, Zug நிறுவனமான Bossard ஆகியவையும் அடங்கும்.

SonntagsBlick இன் கருத்துப்படி, 1999 இல் தொடங்கிய உளவு வேலை 2006 வரை நீடித்தது. ஜேர்மன் உளவாளிகள் எவ்வாறு தகவல்களை சேகரித்தனர் என்பது தெளிவாக தெரியவில்லை, ஆனால் தரவுகளில் ஒரு பகுதி அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு முகாமைக்கு (NSA) அனுப்பப்பட்டுள்ளது என இந்த பத்திரிகை தெரிவிக்கிறது.