Jun 14

நாட்டையே உலுக்கியுள்ள பெரும் அதிர்ச்சிகர சம்பவம்..!! கதவோரமா மறஞ்சி நின்னு பார்த்துகிட்டிருந்த அம்மா..

அம்மா வாங்கம்மா.... நம்ம வீட்டுக்கு போவோம்..!அந்த மாமா சரியில்லம்மா... வாங்க போயிரலாம்...ஒங்கள விட்டு எங்களால வாழ முடியாதம்மா.... வாங்களே....!

கெஞ்சி கேட்டும் பிள்ளைகளின் கண்ணீரையும் பொருட்படுத்தாது கள்ளக்காதலனுடன் சென்ற இரு பிள்ளைகளின் தாய். - பிலியந்தலையில் சம்பவம்..

தந்தை தாய் இரு சிறுமிகள் (பெற்ற பிள்ளைகள்) என ஓர் சிறிய குடும்பம் நிம்மதியாக வாழ்ந்து வந்த நிலையில் குடும்ப தலைவருக்கு நண்பர் ஒருவர் கிடைக்கின்றார்.

அவர் முன்னாள் இராணுவ வீரர் என்பதோடு, இராணுவத்திலிருந்து தப்பி வந்தவர் எனவும் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.குடும்ப தலைவருக்கும் அவருக்கும் இடையில் சிறந்த நட்புறவு தொடர்கின்றது.

முன்னாள் இராணுவ வீரர், குறித்த குடும்பத்தலைவரின் வீட்டிற்கு வருதும், அவரின் வீட்டில் சாப்பிடுவதும் இவ்வாறு நீண்ட காலம் கடந்துள்ளது.சிறிது காலம் செல்கையில், குடும்பத்தலைவரின் மனைவி குடும்பத்தலைவர் மீது அக்கறையின்றி செயற்படுவதும், அடிக்கடி வெளியே சென்று வீடு திரும்புவதும் சில காலங்களாக இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில் குடும்பத்தலைவர் தனது நண்பரான முன்னாள் இராணுவ வீரரை வீட்டிற்கு அழைத்து வருவதை நிறுத்திக்கொண்டார்.

இந்நிலையில், மனைவி கணவரிடம் கோபம் கொள்வதும் அன்பின்றியும் அவரை புறக்கணித்து செயற்பட்டுள்ளார்.

கணவருக்கு சந்தேகம் ஏற்பட பிள்ளைகள் மற்றும் அயலவர்களிடம் முன்னாள் இராணுவ வீரர் தொடர்பில் கேட்டறிந்துள்ளார். இதன்போது பிள்ளைகளிடமிருந்து உண்மை கதை வெளியாகியுள்ளது,அப்பா நீங்கள் வீட்டில் இல்லாத நேரத்தில் அந்த மாமா வீட்டிற்கு வருவார்.

அவர் வந்தவுடன் அம்மா ரூமுக்குள்ள போய் கதவ மூடிப்பாங்க. அந்த மாமா சாப்பாடு வாங்கிகொண்டுதான் வருவார். அதனை சாப்பிட்ட பிறகு நாங்க ரெண்டு பேரும் வெளியிலேயே உங்கள பார்த்திகிட்டு இருப்போம்.

அந்தி நேரம் பார்த்து அந்த மாமா போயிருவாரு அப்புறமா நீங்க வந்திருவீங்க'இப்படி பிள்ளைகள் தெரிவித்துள்ளனர்.பிள்ளைகள் இருவரையும் தனது கரம் கொண்டு மார்பில் அனைத்துக்கொண்ட தந்தை கண்ணீர் விட்டு கதறியழுதுள்ளார்.

பின்னர் தனது மனைவிடம் இது தொடர்பில் வினவியதற்கு.' நீ எனக்கு செஞ்தெல்லாம் போதும். ஒனக்கு ரெண்டு புள்ளையையும் பெத்து கொடுத்திட்டேன். இனி என்னால உன்னோட வாழ முடியாது.

எனக்கு ஏதாவது செய்யனுன்னு நினைச்சா என்ன விட்டு போயிரு. எனக்கு ஒன்னோட வாழவே பிடிக்கல'என்று தெரிவித்துள்ளார்.மனமுடைந்து போன கணவர்' சரி பிள்ளைகள் இருக்காங்க சத்தம் போடாத, நா ஒனக்கு தொல்ல குடுக்கமாட்டேன்.

ஒன்னோட எந்த விசயத்திலும் தலையிட மாட்டன், ஆனா நம்ம புள்ளைகளுக்காக நல்லவளா நடிச்சைனா போதும்.என கூறியதோடு,நா ஒனக்கு எந்த குறையும் வைக்கலயே ஏன் எனக்கு இப்படி ஒரு துரோகம் செஞ்சிட்ட. எல்லாம் என் தலையெழுத்து.என தெரிவித்து அறையிலிருந்து வெளியேறி மீண்டும் பிள்ளைகளுடன் நித்திரைக்கு சென்றார் தந்தை.இப்படியே சிலகாலம் சென்ற பின்னர்... கணவர் வீட்டில் இல்லாத சந்தர்ப்பம் பார்த்து மனைவி கடைக்கு சென்று வருவதாக பிள்ளைகளிடம் தெரிவித்து விட்டு சென்றுள்ளார்.

சூரியன் மறைந்த பின்னரும் தாய் வீட்டிற்கு வரவில்லை.தயை எதிர்பார்த்திருந்த பிள்ளைகள் கதறி அழுவதை கண்டு அயலவர்கள் அவர்களை அழைத்து வீட்டில் தங்க வைத்துள்ளனர்.கணவர் வீடு திரும்பியதும் பிள்ளைகளை தேடியுள்ளார்.

அந்த சமயம் அயலவர்கள் நடந்த விடயத்தினை தெரிவித்துள்ளனர்.கணவர் காவல் நிலையம் சென்று மனைவியை காணவில்லை என முறைப்பாடு செய்துவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

ஓரிரண்டு நாட்கள் கடந்த பின்னர் காவல் துறையினர் மனைவியையும் அவரது கள்ளக்காதலனையும் நகரொன்றில் வைத்து கைது செய்துள்ளனர்.கைது செய்தப்பின்னர் குறித்த பெண்ணின் உத்தியோகப்பூர்வ கணவருக்கு தெரிவித்துள்ளனர்.

தனது பிள்ளைகளுடன் காவல் நிலையத்திற்கு சென்ற அவர், காவல் துறையினரின் விசாணைகளுக்கு முகம் கொடுத்துள்ளார்.எனினும் குறித்த பெண் தனது கணவருடன் தொடர்ந்து வாழ விருப்பம் இல்லை என தெரிவித்ததோடு கள்ளக்காதலுடனேயே தொடர்ந்து வாழ விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

இந்த தருணத்திலேயே,

அம்மா வாங்கம்மா.... நம்ம வீட்டுக்கு போவோம்..! அந்த மாமா சரியில்லம்மா... வாங்க போயிரலாம்...ஒங்கள விட்டு எங்களால வாழ முடியாதம்மா.... வாங்களே....!என்று அழைத்துள்ளனர்.மறுப்பு தெரிவித்த தாய் கள்ளக்காதலனுடனேயே சென்றுள்ளார்.

இந்நிலையில் இருவரும் பெண் பிள்ளைகள் என்பதால் அவர்களின் நன்மைக்கருதி இருவரையும் சிறுவர் பாதுகாப்பு நிலையத்திற்கு அனுப்பி வைத்து கற்கை நடவடிக்கைகளை தொடர காவல் துறையினரால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிள்ளைகள் இருவரும் சிறுவர் காப்பத்திற்கு அழைத்து செல்லப்பட்டதன் பின்னர், காப்பக அதிகாரிகளால் அன்பு வார்த்தைகள் கொண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதன்போது பல அதிர்ச்சியான தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அந்த மாமா ஒரு நாள் வீட்டு வந்தார். நான் அம்மா தங்கச்சி மூவரும் ஒரு அறைக்குள் இருந்தோம், அப்பா வேலைக்கு போயிட்டாரு.

அவர் வந்தவுடன் அம்மா எங்க ரெண்டு பேரையும் தனியே விட்டு அறைக்கு வெளியே சென்று கதவை மூடிட்டாங்க. அந்த மாமா என்னோட கை கால்களை கயிற்றால் கட்டி விட்டு பண்ணகூடாத எல்லாத்தையும் பண்ணிட்டாங்க. அப்பறமா... என்னோட 7 வயசு தங்கச்சிக்கிட்ட போனாங்க.

தங்கச்சிட உடுப்பு எல்லாத்தையும் கழட்டிட்டு அவங்கட கைய வச்சாங்க. பிறகு எழுந்து நின்னு என்னோட தங்கச்ச உடுப்பில்லாம போட்டோ எடுத்தாங்க. இதெல்லாத்தையும் அம்மா கதவோரமா மறஞ்சி நின்னு பார்த்துகிட்டுதான் இருந்தாங்க'என 15 வயதுடைய மூத்த மகள் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அதிரடியாக செயல்பட்ட சிறுவர் காப்பகத்தின் அதிகாரிகள் காவல் துறையினருக்கு அறிவித்து குறித்த சிறுமிகளின் தாய் மற்றும் அவரின் கள்ளக்காதலன் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.

அத்துடன் குறித்த நபரின் இந்த செயலை அறிந்துக்கொண்ட பிரதேச வாசிகள் முன்னாள் இராணு வீரரை மடக்கிப்பிடித்து நையப்புடைத்துள்ளனர் எனவும் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பிலியந்தலை காவல் துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.