Jun 14

சிறப்பாக இடம்பெற்ற யாழ்.பாசையூர் அந்தோனியார் ஆலயப் பெருவிழா

யாழ்ப்பாணம் பாசையூர் புனித அந்தோனியார் ஆலயப் பெருவிழா நேற்று 13.06.2018 புதன்கிழமை வெகுவிமர்சையாக நடைபெற்றது.இந்த பெருவிழாவில் பதுவைப் புனிதரான அந்தோனியார் தேரில் ஏறி வீதி உலா வந்து பக்தர்களுக்கு ஆசிர் வழங்கினார்.

இந்நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அந்தோனியாரைத் தரிசிக்க வருகை தந்திருந்தனர்.இதேவேளை யாழ்ப்பாணத்தில் நேற்று அச்சுவேலி மற்றும் நெல்லியடி பகுதிகளில் உள்ள அந்தோனியார் ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது