Apr 19

யாழில் கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு குழந்தை வைத்தியரை நியமிக்கக் கோரி, ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக பொதுமக்கள் மற்றும் கர்ப்பிணிகள் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

நீண்ட காலமாக குறித்த வைத்தியசாலையில் குழந்தை வைத்தியர்கள் இல்லை என்றும் இதனால் தாம் பல அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

எங்கள் குழந்தை நலனில் விழிப்பாக இருக்காதது ஏன், வடக்கு மாகாண அமைச்சரே பதில் கூறும், உயிர் உலகைக் காண வரும்போது மருத்துவர் இன்றி மடிவதா? போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.