Jan 10

பனிப்பாறைச் சரிவு அபாயம்: அறைகளுக்குள் முடங்கிய 13,000 சுற்றுலாப் பயணிகள்

பனிச்சறுக்கு விளையாட்டுகளுக்கு பேர் பெற்ற இடம் சுவிற்சர்லாந்தின் Zermatt ஆகும்.

பிரபலமான சுற்றுலாத்தலமான இங்கு வருகை தந்துள்ள சுமார் 13,000 சுற்றுலாப் பயணிகள் பனிப்பாறைச் சரிவு அபாயம் காரணமாக வெளியே எங்கும் செல்ல இயலாமல் அறைகளுக்குள் முடங்கினார்கள்.

சாலை மூடப்பட்டுள்ளது, ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால் Zermatt கிராமம் வெளி உலகத்திலிருந்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.

மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை காலை ஊடகங்கள் செய்தி வெளியிட்டது. commune president Romy Biner-Hauser, அரை மணி நேரத்திற்கு ஒரு முறை நிகழ்வுகள் கண்காணிக்கப்படுவதாகவும், நிலைமை மாறினால் தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.