Jan 09

4மீற்றர் வெள்ளப் பெருக்கில் செய்ன் நதி - பரிசிற்கு வெள்ள எச்சரிக்கை!

கடந்த சில நாட்கள் பிரான்சின் பல பகுதிகளில் பெய்த மழையினால், செய் நதியின் நீர் மட்டம் மிக விரைவாக உயர்ந்து வருகின்றது.

இது தொடர்ந்தால் பரிஸ் மற்றும் செய்ன் நதியை அண்டிய புறநகர்ப் பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதென்ற விழிப்புணர்வு எச்சரிக்கையை வெள்ள ஆபத்துகளிற்கான தகவல் மையமான Vigicrues(Service d'information sur le risque de crues) வழங்கி உள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை, மழை வெள்ளத்தினால் பரிசில் 3.27 மீற்றர் அளவு உயர்ந்த செய்ன் நதி, இன்று 4 மீற்றரை எட்டி உள்ளது. இது தொடர்ந்நதால் பெரும் ஆபத்து என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இன்னமும் சில நாட்களிற்குப் பல இடங்களில் பெருமழை பெய்ய உள்ளமையே இந்த எச்சரிக்கையை வழங்கக் காரணமாகி உள்ளது.ஆனாலும் 1910 ஆம் ஆண்டு, பரிசை வெள்ளம் மூழ்கடித்த போது, செய்ன் நதி 8.62 மீற்றரை எட்டி நகரத்தினுள் புகுந்து பெரு வெள்ளத்தை ஏற்படுத்தியது.