Jan 08

ஜெர்மனியில் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான கூட்டணிப் பேச்சுவார்த்தை இன்று!

ஜெர்மனியில் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான புதிய சுற்றுக் கூட்டணிப் பேச்சுவார்த்தையை, இன்று(07.01.2018) ஜெர்மனிய அதிபர் அங்கேலா மெர்கல் ஆரம்பிக்கவுள்ளார்.


ஜெர்மனியில் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான கூட்டணிப் பேச்சுவார்த்தை இன்று!


ஜெர்மனியில் கடந்த செப்டெம்பரில் நடைபெற்ற பொதுத்தேர்தலில், பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ளவதற்கு தேர்தலில் போட்டியிட்ட கட்சிகள் தவறியிருந்தன. இதனால் அங்கு ஆட்சியமைப்பதில் குழப்பமான நிலை ஏற்பட்டுள்ளதுடன். ஒரு நெருக்கடியான சூழ்நிலையும் காணப்படுகிறது.


இந்த பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், புதிய சுற்றுப் பேச்சுவார்த்தையை, ஜெர்மன் அதிபர் மெர்கல் இன்று தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். குறித்த பேச்சுவார்த்தையில், கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சி (சி.டி.யூ.), கிறிஸ்தவ சமூக ஒன்றியக் கட்சி (சி.எஸ்.யூ.) மற்றும் சமூக ஜனநாயகக் கட்சி (எஸ்.பி.டி.) ஆகிய கட்சிகள் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதேவேளை, கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதற்கு இது ஒரு இறுதிச் சந்தர்ப்பமென, அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.