Jan 08

சுவிஸில் கஞ்சா பயன்பாட்டை சட்டபூர்வமாக்க நடவடிக்கை!

சுவிட்சர்லாந்தில் கஞ்சா பயன்பாட்டை சட்டபூர்வமாக்க தனியார் குழு ஒன்று மக்களிடம கையெழுத்து இயக்கத்தை தொடங்கவுள்ளது.

சுவிட்சர்லாந்தில் மண்டல வாரியாக கஞ்சா பயன்பாடு குறித்த சட்டம் வேறுபடுகிறது. ஆனால் அதிக சக்தி தன்மை இல்லாத கஞ்சா விற்பதற்கு சில மண்டலங்களில் மட்டும் அனுமதிக்கப்படுகின்றது.

இந்நிலையில் Legalize it என்ற குழு நாட்டில் கஞ்சாவை சட்டபூர்வமாக அனுமதிக்க கோரிக்கை விடுத்து கையெழுத்து இயக்கம் நடத்தவுள்ளது. இதற்காக 100,000 பிராங்குகள் நிதியை வசூலிப்பதற்கான பணிகளும் நடந்து வருகின்றது.

மேலும் கையெழுத்து இயக்கம் நடத்தி இந்த விடயத்திற்கு தேசிய அளவில் வாக்கெடுப்பு நடத்தவைக்க வேண்டும் என்பதே இந்த குழுவின் நோக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் ஒரே நாளில் 400 நகரங்களிற்கு சென்று மக்களிடம் கையெழுத்து வாங்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக Legalize it குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.